வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் !

232 0

யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி அறிவித்தலை கொழும்பு சென்றதும் உடனடியாக வெளியிடவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின்  தொழில்நுட்ப துறைக்கான கட்டடம் ஒன்றை நேற்றையதினம் திறந்துவைத்து விட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

இந்த வளாகத்தை தரமுயர்த்த வேண்டும் என்பது எனக்கு முன்பேசிய எல்லோரது வேண்டுகோளாகவும் இருந்தது. இலங்கையில் 15 தேசிய பல்கலைகழகங்கள் இருக்கும் நிலையில் வளப்பங்கீடு என்பது ஒரு பிரச்சினையாக காணப்படும் நிலையில் இது சாத்தியமாகுமா என்ற விடயம் தொடர்பாக நாம் திறைசேரியோடு முரண்படும் நிலை வந்தாலும் நான் கொழும்பு திரும்பியதும்  ஒருசில நாட்களுக்குள் தனிப்பல்கலைகழகமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவேன் என நிச்சயமாக கூறுகிறேன். 

தான் உயர்கல்வி அமைச்சராக பதவியில் இருக்கும் போதே இது தனி பல்கலைகழகமாக மாறும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், வளாகமுதல்வர் ரி.மங்களேஸ்வரன் ஆகியோர் உரையாற்றும் போது குறித்த விடயம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.