. மாறாக அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துவந்த இவர்களால் அது இல்லாமல் இருக்கமுடியாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருந்த 20 வருட காலத்தில் வரிய மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் ராஜபக்ஷ் குடும்பத்துக்கும் அவர்களுக்கு தேவையான அரசியல் அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவுமே செயற்பட்டனர்.
இவர்கள் கடந்த 20 வருடங்கள் ஆட்சியில் இருந்து செய்ய முடியாமல்போன வேலைத்திட்டங்களை நாங்கள் கடந்த மூன்று வருடங்களில் பிரதமரின் தலைமையில் செய்துமுடித்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
இரத்தினபுரியில் இன்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.