செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம்-ரணில்

392 0

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ். மாநகர சபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா். 

வட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (14) காலை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். 

இதன்போது யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

இதன்போது யாழ். மாநகர சபை மேயர் ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிாி வரைபை சமா்பித்திருந்ததுடன், பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தாா். 

இதன்போது கருத்து தொிவித்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, குறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம் என கூறியதுடன், முதல்வருக்கு வாழ்த்தக்களை கூறியதுடன், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு அந்த கூட்டத்திலேயே இணக்கம் தொிவித்துள்ளாா். 

தொடா்ந்து கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த மாநகர சபை மேயர் ஆனோல்ட் யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமாா் 293 ஏக்கா் நில பரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம். 

இதற்கு தேவையான 293 ஏக்கா் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த முறை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்த திட்டம் குறித் த முன்னோட்டத்தினை, பிரதமாின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அப்போதே அதனை வரவேற்ற பிரதமா் உடனடியாக தன்னை வந்து சந்தித்து உாிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தாா். 

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ. சுமந்திரன், யாழ். மாவட்ட செயலா் என். வேதநாயகன் ஆகியோர் பிரதமரை சந்தித்து திட்டம் தொடா்பாக விாிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 

அதில் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆழுகைக்குள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனை அடுத்து பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கா் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தொிவித்தது. அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணா்களை அழைத்து வந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிாி ஒன்றையும் தயாா் செய்துள்ளோம். 

அதனை பிரதமா் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமா்பித்த போது அதனை பகிரங்கமாக வரவேற்ற பிரதமா் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தொிவித்துள்ளாா் என கூறினாா். 

இதேவேளை குறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடா்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது.