கிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி

240 0

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் 4,113 குடும்பங்களைச் சேர்ந்த 16,801 வரையான மீனவர்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மீன்பிடியில் வீழச்சிநிலை ஏற்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வாழ்வாதார நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மீனவர்களின் முதலீடுகளுக்காகவும் கிடைத்த மொத்த உற்பத்தி 10,471 மெற்றிக்தொன் கடலுணவுகளாகும்.

ஆனால், 2017 ஆம் ஆண்டில் 16, 664 மெற்றிக்தொன் கடலுணவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்குமிடையில் 1,200 மெற்றிக்தொன் உற்பத்தி மாவட்டத்தில் குறைவாக இடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக, 2018 ஆம்  ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவு கடற்பகுதியில் கடற்தொழில் செய்வதற்காகவும் அங்கு மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் பரப்பைவிட, 2018 ஆம் ஆண்டில் கூடுதலான பகுதியில் தொழில்கள் மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.