ஊரியான் பகுதியில் வயல் நிலத்தில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை

259 0

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்தில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று  கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே. ஆயகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கோரக்கன் கட்டு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கமக்கார அமைப்பின் கீழுள்ள வயல் காணி ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் நீண்ட காலம் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பனைமரங்கள்  என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணியில் இருந்து முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவரால் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு தனது காணிக்குள் நிரப்பபட்டுள்ளதாக கமக்கார அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை இது தொடர்பில கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர், கதிர்காம நாதனை தொடர்பு கொண்டபோது, குறித்த ஊரியான் கமக்கார அமைப்பிற்குட்பட்ட மேற்படி காணியிலோ அல்லது கழிவு காணிகளிலோ மரங்களை அழித்து மண் அகழ்வு மேற்கொள்வதற்கோ வயல்நிலங்களை மண்ணிட்டு நிரப்புவதற்கோ அனுமதிக்கப்படவில்லை. மேற்குறித்த வேலையை ஒரு அமைப்பினுடைய தலைவரும் சம்மேளனத்தின் பொருளாளரும்  இவ்வாறான ஒரு வேலையை எநதவித அனுமிகளுமின்றி செய்திருப்பது சட்டதிடடங்களை அவமதிக்கும் செயலாகும் என்றும் இது தொடர்பில் உரிய கமக்கார அமைப்பிடம் இருந்து குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊரியான்  பகுதியில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார்.