உலகின் மிகப்பெரிய ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.
500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.