அரசியலமைப்பு பேரவையை சபாநாயகர் தனது அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார். ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரித்து பிரதம நீதியரசரின் பரிந்துரைக்கமைய செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பிரதமரும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையில் இடம்பெறும் மோசமான நடவடிக்கைகளை நாங்கள் விமர்சிக்கும்போது, அரசியல் வங்குரோத்து நிலையில் இருப்பவர்களே இதனை விமர்சிப்பதாக பிரதமர் தெரிவிக்கிறார்.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைப்பதவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதனை நிராகரித்து செயற்படுவதே அரசியல் வங்குரோத்து நிலையாகும் என்பதை பிரதமருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.