தேர்தலை நடத்த அவசியம் இல்லையெனில் மாகாணசபை முறையை நீக்கிவிட வேண்டும்-தேசப்பிரிய

285 0

உரிய காலத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடத்துவதே ஜனநாயக பண்பாகும். மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை நடத்த வேண்டிய   அவசியம் இல்லை என்றும்  மாகாணசபைகள் தேவையில்லை என கருதினால் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையினை நீக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த தேர்தல் முதலில் இடம்பெற வேண்டும் என்பதில் தர்க்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபை தேர்தலின் பின்னரே ஏனைய தேர்தல்களை நடத்த முடியும். 

ஆகவே எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படா விட்டால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை விட்டு விலக போவதாகவும் குறிப்பிட்டார்.