யாழ்-போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு பிரதமர் தலைமையில் திறப்பு

317 0

யாழ்-போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதிதீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு குறித்த சிகிச்சைப்பிரிவினை வைத்திய சமூகத்திடம் கையளித்தார்.
குறித்த கட்டடத்தொகுதி 245 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தியின் முன்னாயத்த வேலைத்திட்டங்களுக்கு எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தின் மூலம் பாரிய நிதித்திட்டமிடலை உருவாக்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
குறிப்பாக வடமாகாணத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் முக்கியம் வாய்ந்தாக காணப்படுகின்றது. எனவே இந்நிதித்திட்டமிடலை உருவாக்குவதற்கு அரச அதிகாரி பங்களிப்பு மிக அவசியமாக காணப்படவேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சி வீதத்தில் மாவட்டங்களின் அபிவிருத்திகள் முன்னேற்றம் கண்டுவருகின்றது அந்தவகையில் இவ்வாறான ஒரு மாவட்ட அபிவிருத்தி காணவேண்டும் என அவர் தெரிவித்தார். வடமாகாணத்திலும் சிறப்பான ஒரு பண்பாட்டினை அபிவிருத்தியினை உருவாக்க முடியும் அதனையும் நாங்கள் விஸ்தரிக்க எண்ணியுள்ளோம்.
இந்நிகழ்வில், அமைச்சர்களாக வஜிர அபேயவர்த்தன, சாகல ரட்ணநாயக்கா, ரஜித சேனாரட்ண, ரீசாத் பதுதீன், அகிலவிராஜ் காரியவசம், அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகிய மாவைசேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன் மற்றும் அரச அதிகாரிகள், திணைக்களத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டர்.