இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் இல்லை எனவும் பாதுகாப்பானதும் பொதுமக்கள் நுகர்வுக்கு ஏற்றதுமானது என சுகாதார அமைசு தெரிவித்துள்ளது.
இலங்கை கட்டளைகள் நிறுவனமும் மாதிரிகளை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினூடாக ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து பால்மாவில் வேறு வகையான கொழுப்பு மற்றும் எண்ணெய் எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என உறுதியளித்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவுடன் பன்றிக் கொழுப்பு மட்டும் மரக்கறி எண்ணெய் கலக்கப்படுவதாக கடந்த வார பாராளுமன்ற அமர்வுகளின் போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது பாரிய குழப்பத்தில் ஏற்படுத்தியிருந்த நிலையில் சுகாதார அமைச்சி இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.