மின்தூக்கி செயலிழந்தமைக்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம்!

235 0

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள மின்தூக்கி செயலிழந்தமைக்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின் தூக்கி பழுதடைந்த சந்தர்ப்பத்தில் மின்தூக்கியை பயன்படுத்தியோரின் எண்ணிக்கை அதிகரித்தமையே மின்தூக்கி செயலிழந்தமைக்கான பிரதான காரணம் என மின்தூக்கி தொடர்பில் ஆராய்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படுகின்ற மின்தூக்கிகள் 36 வருடங்களுக்கும் அதிகம் பழமைவாய்ந்தவை என்பதுடன், புதிய மின்தூக்கியை பொருத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரமும் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.