2018-2019 சிவனடிபாதமலை பருவகாலம் கடந்த டிசம்பர் மாதம் பெளர்ணமி தினத்துடன் ஆரம்பமான அன்று முதல் இன்று வரையான காலப்பகுதிகளில் சிவனடிபாதமலை உச்சியிலிருந்து அடிவாரம் வரையான பகுதிகளில் சுமார் 1இலட்சத்து 10 ஆயிரம் பொலித்தீன்கள் கழிவுகளாக பெறப்பட்டதாக மஸ்கெலியா, இரத்னபுர, குருவிட்ட ஆகிய பிரதேச சபையின் தவிசாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மூன்று பிரதேச சபையினால் முன்னெடுக்ப்பட்ட கழிவு பொருள் அகற்றல் நடவடிக்கையின் போது இவ்வாறான பெருந்தொகையான பொலித்தீன்கள் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
சிவனடிபாதமலை ஆரம்பிக்கபட்ட 2018 ஆம் ஆண்டு முதற்காலபகுதியிலேயே, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் மலை அடிவாரத்திலிருந்து உச்சிவரையான பகுதியில் சுமார் 1லட்சம் கிலோ பொலித்தீன்களும்,இரத்னபுர பிரதேச சபைக்கு உரித்தான பகுதியில் 5 ஆயிரம் கிலோ பொலித்தீன்களையும் கழிவுபடுத்தினர்.
குருவிட்ட பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் 10 ஆயிரம் கிலோ பொலித்தீன்களும் அகற்றப்பட்டுள்ளதாக கூறினர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில்,ஹட்டன் நல்லதண்ணி வழியில் செல்லும் ஊசி மலைவரை உள்ள பகுதியில் வாரம் ஒன்றுக்கு 1500கிலோ முதல் 6000 கிலோ வரையான பொலித்தீன் பிலாஸ்டிக் போத்தல்கள் குப்பைகளுடன் சேகரிப்பதாகவும்பொலித்தீன்,பிலாஸ்டிக் பொருட்கள் சுமார் 13 ஆயிரம் கிலோ சேர்வதாகவும் அதன்படி ஒருமாதத்திற்கு 52 ஆயிரம் பொலித்தீன் உட்பட எனைய கழிவு பொருட்கள் சுமார் 3 இலட்சத்து 12 ஆயிரம் கிலோ கழிவுகள் மஸ்கெலியா பிரதேச சபையால் மாத்திரம் அகற்றபடுவதாகவும் இவ்வாறு சேரும் பொருட்களில் பொலித்தீன்களில் மட்டும் 1 இலட்சம் கிலோவாகும் ஏனைய கண்ணாடி மற்றும் இறப்பர் போன்ற உக்காத பொருட்கள் 52 கிலோவாகும்,உக்கும் பொருட்கள் 1 இலட்சத்து 60 கிலோவாகும் என மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
கியத்தெல கங்குல எனும் ஆற்றில் சுற்று சூழல் பாதிக்கும் வகையில் மவுசாகல நீர் தேக்கத்தில் பாரிய அளவில் குப்பைகளை கொட்டபடுவதாகவும் அதனை தவிர்க்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்ததுடன்,இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணவேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.