மன்னார் மனித புதைகுழியில் இருந்து இது வரை 316 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

223 0

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு  பணிகள் இன்று அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது.

தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகள் இன்று144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 144 அவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.தற்போது வரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை 14 ஆம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்படும்.

குறித்த அறிக்கையானது 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டுஅமைந்திருக்கும்.

இன்றைய தினம் அகழ்வு பணிகளின் போது சுமார் 40ற்கும் மேற்பட்ட பொலிஸார் பயிற்சி பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் மனித புதைகுழி பகுதிக்கு வருகை தந்தனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment