ஜெயலலிதாவை பரிசோதித்த பிருத்தானிய மருத்துவர்

317 0

%e0%ae%9c%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%af%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%b3%e0%ae%a8%e0%ae%b0-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%9aசென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலையை பிருத்தானிய விசேட மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.
பரிசோதனையினை மேற்கொண்ட லண்டன் மருத்துவ குழுவைச் சேர்ந்த ரிச்சட் ஜோன் பெல், ஜெயலலிதா ஜெயராமிற்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் சிறந்த தரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா ஜெயராம் மருத்துவ அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து தமிழக மக்கள் குழப்பமான நிலையில் உள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

தமிழக ஆணையாளர் வித்யாசாகர் ராம் நேற்று ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டதுடன் முதல்வரின் உடல்நிலை தேறி வருவதாக குறிப்பிட்டார்.

68 வயதான தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கள் தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.