எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தில் உதவி ஆசிரியர்களுக்கான சலுகைகளை பெற்றுத்தருமாறு கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.