பேருவளை-கங்கானம்கொட பிரதேசத்தில், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பிலான 300 சிகரெட்டுகளுடன், அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பொலிஸாரால், இவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தன்னிடமுள்ள சிகரெட்டுகளை அப்பகுதியில் விற்பனைச் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் விற்பனைச் செய்யப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் விலையை விட, குறைந்த விலையில் சந்தேகநபர் விற்பனைச் செய்து வந்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த, பேருவளை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.