கொழும்பின் இரு வேறுபட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் உட்பட வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிரேண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 31 வயதுடைய ஹேனமுல்ல பகுதியை சேர்ந்த தொல்க முதியன்சலாகே சமர சம்பத் எனப்படுபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து, 23 கிராம் 460மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதனையடுத்து சந்தேக நபர் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபரை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இன்றைய தினம் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கல்கிசை – போடோவிட பகுதியில் 2கிராம் 300மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.