இந்த ஆண்டில் கல்வியற் கல்லூரிகளில் கற்று வெளியேறியுள்ள ஆசிரியர்கள் தங்களை முதலமைச்சர் கரியாலயத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சார் ஹாபீஸ் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இரவு 10 வரையில் இந்த பதிவுகளை செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறியுள்ள ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திலேயே நியமனம் பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கிழக்கு மகாணத்திலுள்ள தொழிலற்ற பட்டதாரிகள் எதிர்கொண்டுள்ள வேலைவாய்ப்புப் பிரச்சனை தொடர்பிலும் நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.