சமூகவிஞ்ஞான ஆய்வு மையத்தின் ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை’ நூல் தொகுதி அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெற்றுள்ளது!
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினால் தயார்செய்யப்பட்ட ‘அரசியல் சிந்தனை நூல்வரிசை’ நூல்கள் 13 உள்ளடங்கிய நூல்தொகுதி அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (10/02/2019) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கொழும்பு தமிழ்ச் சங்கம், வினோதன் மண்டபத்தில் இன்று மாலை மாலை 4.30 மணியளவில் அருட்தந்தை மா.சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பித்தது. சமூக விஞ்ஞான ஆய்வு மைய செயற்பாட்டாளர் அ.பகீரதன் அவர்களது வரவேற்புரையினை சமூக விஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளர் திரு சி.அ.யோதிலிங்கம், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எம்.நிலாந்தன் ஆகியோர் எழுதிய 13 நூல்களின் தொகுதி இவ்வாறு அறிமுகம் செய்து வெளியிட்டு வைக்கப்பட்டது.
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் செயற்பாட்டாளர் அ.பகீரதன் அவர்களின் வரவேற்புரையினை தொடர்ந்து அருட்தந்தை மா.சக்திவேல் அவர்கள் தலைமையுரையினை ஆற்றியிருந்தார். தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கிருஸ்ணமோகன் அவர்கள் நூல் தொகுதியினை வெளியிட்டுவைத்ததுடன் வெளியீட்டு உரையினையும் நடாத்தியிருந்தார்.
‘அரசியல் சிந்தனை நூல்வரிசை’ நூல் தொகுதியின் முதல் பிரதியினை தொழில் அதிபர் மு.ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். சுங்கத்திணைக்கள அத்தியட்சகர் செ.சக்திதரன், ஆசிரியர் பொன்.பிரபாகரன் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரையினை வழங்கியிருந்தார்கள்.
ஓய்வு பெற்ற வங்கி அலுவலர் (கல்முனை) சு.அரசரத்தினம், தொழில் அதிபர் மு.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர் வே.இந்திரச்செல்வன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். சமூக விஞ்ஞான ஆய்வு மைய இணைப்பாளர் சி.அ.யோதிலிங்கம் அவர்கள் ஏற்புரையைத் தொடர்ந்து முகத்துவாரம் இந்துக்கல்லூரி ஆசிரியர் சிறீராம் அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
1- “நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையும் தமிழ் மக்களும்” – சி.அ.யோதிலிங்கம்
2- “இந்தியாவும் தமிழ் மக்களும்” – சி.அ.யோதிலிங்கம்
3- “நினைவு கூர்தல்-2017” – எம்.நிலாந்தன்
4- “தமிழ் அரசியலின் இலக்கும் வழிவரைபடமும்” – சி.அ.யோதிலிங்கம்
5- “மோடியின் இலங்கைப் பயணமும் மலையகமும்” – சி.அ.யோதிலிங்கம்
6- “இந்து சமுத்திரமும் சீனாவும்” – கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம்
7- “வட-கிழக்கு இணைப்பும் முஸ்லீம் மக்களும்” – சி.அ.யோதிலிங்கம்
8- “இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வதேச அனுபவங்கள்” – சி.அ.யோதிலிங்கம்
9- “ஈழத்தமிழர் அரசியல் வரலாறு” (சுருக்கக் குறிப்புகள்) பாகம்-01 – சி.அ.யோதிலிங்கம்
10- “சர்வதேச அரசியலும் வடகொரியாவும்” கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம்
11- “இலங்கை-இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களும்” – சி.அ.யோதிலிங்கம்
12- “மலையக மக்களின் அடையாளம் எது?” – சி.அ.யோதிலிங்கம்
13- “ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் வளர்ச்சிக்கட்டங்கள்” – சி.அ.யோதிலிங்கம்
ஆகிய நூல்கள் உள்ளடக்கிய நூல் தொகுதியே இவ்வாறு அறிமுகம் செய்து வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள் : இரா.மயூதரன்.