பாராளுமன்றத்தில் அரசாங்கத்திடம் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லாமலாகி, சாதாரண பெரும்பான்மையும் இல்லாமலாகியுள்ளது. அதனால் அடுத்த வரவு செலவு திட்டத்தை அங்கிகரித்துக்கொள்வது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. 113 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவிக்கின்றபோதும் 103 பேரே இருக்கின்றனர். தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை கொண்டுவந்தபோது கட்சி தலைவர் கூட்டத்தில் அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். என்றாலும் அதனை எப்படியாவது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அங்கிகரித்துக்கொள்வோம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
என்றாலும் இறுதி நேரத்தில் இவர்கள் நம்பியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்க மறுத்ததால் அரசாங்கம் அந்த பிரேரணையை கொண்டுவரவில்லை எனவும் குறிப்பிட்டார்.