பால்மா சர்ச்சைக்கு தெரிவிக்குழு அமைக்க வேண்டும்-பந்துல

262 0

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி  செய்யப்படுகின்ற பால் மா தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கப் பெறவேண்டுமாயின் சிறப்பு துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய  பாராளுமன்ற தெரிவு குழுவினை நியமிக்க வேண்டும் என  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன முன்வைத்த குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு சில விடயங்களை மையப்படுத்தியே நிராகரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இதுரை காலமும் எவ்விதமான துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய  விசாரணைகள் ஏதும்  இடம் பெறவில்லை. ஆகவே இவ்விடயம் இன்று மக்களின் சுகாதாரத்துடன் தொடர்புப்பட்டதாக காணப்படுகின்றது.அனைவரும்  பொறுப்புடன் செயற்பட  வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Leave a comment