சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் திட்டம்

363 0

saarc-logoஇந்த வருடத்திற்கான தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு காலவரையறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முயற்சியில் நேபாளம் ஈடுப்பட்டுள்ளது.

19வது சார்க் மாநாடு எதிர்வரும் நொவம்பர் மாதம் 9ஆம், 10ஆம் திகதி பாகிஸ்தானின் தலைநகர் ஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைகாரணமாக இந்த மாநாடு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கு இலங்கை உற்பாட 5 நாடுகள், சார்க் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்ற தருணம் இதுவல்லவென தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் தற்போதைய சார்க் தலைமைதுவத்தை கொண்டுள்ள நேபாளம் மாநாட்டை திட்டமிட்ட படி எதிர்வரும் நொவம்பர் மாதம் நடத்துவதற்கான முற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

19வது சார்க் உச்சி மாநாட்டை நடத்த உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட நேபாள வெளிவிவகார துறை அமைச்சர் பிரகாஷ் ஷரன் மஹட் நடவடிக்கைகளை மேற்கொள்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.