கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அடுத்த வருடத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் புதிய கட்டத்தொகுதி அமையும்- வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் (படங்கள்)

402 0

unnamed-2அண்மையில் கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதில் 124 கடைகள் முற்றாக அழிவடைந்து 221 மில்லியன் ருபா நட்டம் ஏற்றபட்டது.

இதன்பின்னர் கரைச்சி பிரதேச சபை உடனடியாகச் செயற்பட்டு 20 ஆயிரம் ரூபா அவசர நிதி 124 பேருக்கும் வழங்கி வைத்தனர் பின்னர் இவர்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொருட்டு 22 பழக்கடைத் தொகுதிகளை அமைத்தனர்.
அவர்களுக்கான வாழ்வாதார உதவியாக ருபா 15000 எஸ்.கே நாதன் என்பவரால் வழங்கப்பட்டு இவர்கள்; வியாபாரத்தை தெடங்கினார்கள்.
மிகுதியாக இருந்த புடவை மற்றும் மளிகை கடைகளை மீள இயக்குவதற்க்காக வடக்கு மாகாண முதலமைச்சரினால் 9.3 மில்லியன் ருபா விசேட நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான அடிக்கல் கௌரவ முதலமைச்சரினால் நேற்று  நாட்டப்பட்டது.
இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர்,
அடுத்த வருடத்தில் கிளிநொச்சி பொதுச்சந்தையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் புதிய நிரந்தரக் கட்டத்தொகுதி அமையும்.
நாங்கள் எப்போதும் உங்களுக்கு சேவை செய்பவர்களாகதான் உள்ளோம்.
வெறுமனே இதை கதைப்பதற்கான களமாக பயன்படுத்தாமல் செயலாற்றுவதற்கான களமாக பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் வங்கிக்கடன் தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிக்கொண்டு உள்ளோம்.
அதுவும் உங்களுக்கு தீர்க்கப்படும்.
இங்கு எரிந்தது வெறும் கடைத்தொகுதியல்ல உங்கள் வாழ்வும் சேர்ந்து எரிந்தது.
இறுதிப்போரைச் சந்தித்து நீங்கள் மெல்ல துளிர்விடும்போது ஏற்பட்ட இந்த அனர்த்தம் உண்மையில் நாங்கள் என்ன செய்வேண்டும் என்பதை உணர்த்தியது.
எனவே இந்த கடைத்தொகுதி உங்களுக்கு விரைவாக கிடைக்கும்.
நீங்கள் மீண்டும் பழய நிலைக்கு வரவேண்டும். இது எங்களின் ஆசை. என்றார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்களான குருகுலராஜா டெனிஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பசுதிப்பிள்ளை அரியரத்தினம் தவநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் தினைக்கள அதிகாரிகள் கரைச்சிபிரதேச சபை செயலாளர் கம்சநாதன் சந்தை வர்த்தகர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6  unnamed-7 unnamed-8 unnamed-9 unnamed-10unnamed-13unnamed-1