தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வேண்டி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை மஸ்கெலியா பொலிஸார் நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.
பொதுச்சொத்துகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் 8ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை முன்வைத்து இந்த தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் போராட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் மஸ்கெலியா பொலிஸாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவில் போராட்டத்தை முன்னெடுக்க வந்த தொழிலாளர்கள் நகரத்தில் ஒன்று கூடியபோதும், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டது.
எனினும் நடைபெறவிருந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.