ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது
இல163, 6ஆம் ஒழுங்கை, கண்டிவீதி, தேக்கவத்தை வவுனியா என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் காரியாலயம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.
ஈ.பி,ஆர்.எல்.எப் கட்சியின் அரசியல்பீட உறுப்பினர் கே.கே.அருந்தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரட்ணம், வட மாகாணசபை உறுப்பினர்களான க.சர்வேஸ்வரன், ஆர்.இந்திரராசா, எம்.தியாகராசா, து.ரவிகரன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.