வடமராட்சி கிழக்கில் குடியமர்ந்துள்ள முன்னாள் போராளிகளது குடும்பங்களை சுமந்திரனின் வழிநடத்தலில் விரட்டியடிக்க அரச அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவ்வகையில் கட்டைக்காடு கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் போராளி குடும்பத்தை வீட்டையும் காணியையும் விட்டு வெளியேறுமாறு கிராமசேவகர் அறிவித்துள்ளார். கட்டைக்காடு கிராமத்தில் கடந்த நான்கு வருடத்திற்கு முன்னராக யோகராசா றொசான்த் என்ற முன்னாள் போராளி கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்று குடியேறியுள்ளார். இவருடன் இவரது மனைவி இவரது பெண் குழந்தையும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கட்டைக்காடு கிராமசேவையாளர் இவரை உடனடியாக காணியையும் வீட்டையும் விட்டு எழும்புமாறு கூறியது மட்டுமல்ல மிரட்டியும் உள்ளார்.
இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் நேரில் சென்று முறையிட்ட போதும் அதi அவர் பொருட்படுத்தவில்லையென சொல்லப்படுகின்றது.
அண்மையில் ஞானசீலன் டிகோனிங் என்ற முன்னாள் போராளியின் குடியிருக்கும் காணிக்கும் பிரதேச செயலகத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.