சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளின் வாகனங்களளுக்கு அதிகளவு கட்டணம்

222 0

நல்லதண்ணி நகரில் காணப்படும் தனியார் வாகன தரிப்பிடத்தில் சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அதிகளவு கட்டணங்கள் அறவிடப்படுவதனால் யாத்திரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக யாத்திரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படும் ஒருசில நகர வியாபாரிகளுடைய வாகனங்கள் மஸ்கெலியா பிரதேச சபையில் பதியப்படாமல் இருப்பதும் குறிப்பிடதக்கது.

இவ்வாறு வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பஸ் ஒன்றுக்கு ரூபா 500,சிறிய பஸ்களுக்கு ரூபா  450,வேன் ஒன்றுக்கு 350 ரூபாவும், முச்சக்கர வண்டிக்கு ரூபா 250வும், மேட்டார் வாகனங்களுக்கு 200ரூபா தாம் விருப்பத்திற்கு ஏற்றால் போல் அறவிடுவதாக யாத்திரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வாகான தரிப்பிடத்தில் தரித்து வைக்கப்படும் வாகானங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லை அவர்களால் பாதுகாப்பும் வழங்கப்படுவதும் இல்லை ஆகையால் அவர்களுடைய வாகானத்தில் வரும் சாரதி அல்லது வாகான உரிமையாளர்களில் யாராவது ஒருவர் கட்டாயமாக வாகானத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒருசில நிமிடங்கள் வாகான

தரிப்பிடத்தில் வாகனங்களை தரித்து நிறுத்தினாலும் மேற்குறிப்பிட்ட கட்டணத்தையே அறவிடுவதாக கூறுகின்றனர்.

சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளின் நலன் கருதி மஸ்கெலியா பிரதேச சபையால் நடாத்தப்படும் வாகன

தரிப்பிடத்திலும் அதிகளவு பணம் அறவிடபடுவதாகவும் சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளிடம் இருந்து குறைந்தளவு கட்டணம் அறவிடபட வேண்டும் என யாத்திரிகளும், வாகான சாரதிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த பிரச்சினை சம்பந்தமாக நாம் மஸ்கெலியா பிரதேச சபை பொலிஸாரிடம் வினவிய போது அதன் செயலாளர் எம்.ராஜவீரன் கூறுகையில் எமது பிரதேச சபையால் நடாத்தப்படும் வாகன தரிப்பிடத்தில் அதிகளவு கட்டணம் அறவிட்டால்

அது தொடர்பாக உடன் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நல்லதண்ணி நகரில் இயங்கும் ஏனைய வாகன தரிப்பிடங்களுக்கு எமது பிரதேச சபையில் பதிவு இல்லை எனவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாகாண ஆளுனர் மற்றும் மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான அதிகாரியுடன் கலந்தாலோசித்து அதனை சுற்று நிருபமாக்கி; அதனை வர்த்தமாணியாக்கிய பின்னர் நடைமுறைபடுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a comment