இயற்கை அனர்த்த சேதங்களை குறைக்க புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகம்- ரஞ்சித்

276 0

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்ப வசதிகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் வரட்சியினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கான நட்டஈடாக 2.1 பில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சீனாவினால் வழங்கப்பட்ட 90 நீர் தாங்கிகளை பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நீர்த்தாங்கிகளை 25 மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நீர் தாங்கியின் பெறுமதி 14 மில்லியனாகும். இதேவேளை தற்போதைய அரசாங்கம் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நட்டஈடு வழங்க துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார். 

Leave a comment