பட்டதாரிகளை வகைப்படுத்தாமல் வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் பொருத்தமான தொழிலை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியபோது, பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை வழங்கிய கட்சி, அரச அதிகாரத்தை வகிக்கும்போது, 60 ஆயிரம் பேர்வரை வேலையற்ற பட்டதாரிகள் இருப்பது பேரழிவாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.