வடக்கில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழில் அண்மையில் இடம் பெற்ற எழுக தமிழ் பேரணியின் போது வட மாகாண முதலமைச்சர்விக்னேஸ்வரன் முன்வைத்த இனவாத கருத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர்மேலும் கூறியுள்ளார்.
விக்னேஸ்வரனின் கருத்துக்கள் அமைச்சர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.