கடந்த ஒருவார காலமாக பணிப்புறக்கணிப்பினால் ஏற்பட்ட தேசிய வருமான வீழ்ச்சிக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கா, இந்த விடயம் தொடர்பில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தலில் பெற்றிப் பெறவும், கட்சியினை பலப்படுத்தவுமே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாத்தை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றிற்கு தடைகளை ஏற்படுத்தும் விதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.