மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் என்று மின் சக்கத்தி, எரிசக்தி அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
மின்சார சபையின் பொறியியலாளர்கள் முன்வைக்கும் பொறியியல் திட்டங்களுக்கு அமைவாகவே நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.
மின்சக்தி மற்றும் புத்தாக்கல் அமைச்சுத் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உலப்பனே சுமங்கல தேரர் உட்பட்ட ரஞ்சித் விதானகேஇ ஊடகவியலாளர் நிஹால் கிரியல்ல, சட்டத்தரணி பிரகீத் பெரேரா, விமுக்தி துஷாந்த ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.