சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்கியமைக்கு எதிராக சுங்க தொழிற்சங்கங்கள் கடந்த 7 நாட்களாக மேற்கொண்ட போராட்டத்தினால் தேங்கியுள்ள கொள்கலன்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நிறைவடையும் என சுங்க தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேற்படி போராட்டம் காரணமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி.எஸ்.எம். சாள்ஸை மீண்டும் மூன்று மாதங்களக்கு அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியதையடுத்தே போராட்டத்தை கைவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.