DIG எம்.ஆர். லதீபின் சேவைக் காலம் நீடிப்பு- அமைச்சரவை அங்கீகாரம்

300 0

பொலிஸ் விசேட படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீபினுடைய சேவைக் காலத்தை மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இந்நாட்டின் 11 ஆவது பொலிஸ் விசேட அதிரடிப் படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.

இவர் இன்றுடன் (05) ஓய்வு பெறவிருந்ததாகவும் இவருடைய சிறப்பான சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக இவருக்கு சேவைக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இவர் இன்று (05) ஓய்வு பெற்றதாக நாளிதழ்களில் முன்பக்க செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Leave a comment