சுங்கத்திணைக்களத்திற்கான புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் அமைச்சரவைத் தீர்மானமாகும். அதில் எந்தவித அரசியல் தலையீடுகளும் கிடையாதென சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நிலையியல் கட்டளை 27 இன் கீழ் 2இல் எழுப்பிய சுங்கத்திணைக்களத்துக்கான புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் தொடர்பான கேள்வியின் போதே சபை முதல்வர் கிரியெல்ல இதனை குறிப்பிட்டார்.
சுங்கத் திணைக்களத்துக்கு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதென்பது அமைச்சரவைத் தீர்மானம். இந்த அமைச்சரவை தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் தான்தோன்றித்தனமான நடவடிக்கை எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.