காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும் என கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு முறைப் பாசனம் அமுல்படுத்த முடிவு செய்து கல்லணையில் கீழ்கண்டவாறு தண்ணீர் பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டு முதல் 6 நாட்கள் வெண்ணாற்றிலும், அடுத்த 6 நாட்கள் காவிரியிலும் என முறை வைத்து நீர் பங்கீடு செய்யப்படும்.
கல்லணை கால்வாய் மேற்பகுதி முறை, கீழ்பகுதி முறை என உள்முறை வைத்தும் தண்ணீர் திறந்து விடப்படும்.வெண்ணாறு முறை பாசனத்திற்காக நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 6-ந்தேதி மாலை 6 மணி வரை காவிரியிலிருந்து 1000 கன அடியும், வெண்ணாற்றிலிருந்து 5000 கன அடியும், கல்லணை கால்வாயிலிருந்து 1500 கன அடியும், கொள்ளிடத்திலிருந்து 1200 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படும்.
காவிரி முறை பாசனத்திற்காக வருகிற 6-ந்தேதி மாலை 6 மணி முதல் 12-ந்தேதி மாலை 6 மணி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.