உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் ஆய்வு

293 0

201610021251334557_local-body-election-vote-counting-centers-collector-study_secvpfகாஞ்சீபுரம் நகராட்சி, வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது அவர் வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் அறைகளின் பாதுகாப்பு, வாக்கு சீட்டுகள் பிரித்து எண்ணுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை கூடங்களை பார்வையிட்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசணை மேற் கொண்டார். மேலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குகளை பிரித்தெடுக்கும் பணிக்கு ஆகும் நேரத்தினை கணக்கில் கொண்டு பணியினை விரைவாக முடிக்க ஏற்றவகையில் வாக்கு எண்ணிக்கை கூடத்தினை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ் செல்வி, வாலாஜாபாத் தாசில்தார் சீதாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, நகராட்சி கமிஷ்னர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.