நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இக்கருத்து அதிர்ச்சியளிக்கின்றது. போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளை தோற்கடித்த அதேமுறையில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கியதான விசேட படையணியை அமைத்தல் என்பது சட்டச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கொலை என்றே அர்த்தப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இது சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.Share