இலங்கை சுங்கப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
இந்த போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 02 பில்லியன் ரூபா நட்டம் அரசுக்கு ஏற்படுவதாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ள தொழிற்சங்கம் கூறியுள்ளது.
இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் திடீரென இடமாற்றப்பட்டு அதற்குப் பதிலாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை சுங்கப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் போராட்டம் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த நிலமை காரணமாக அரசாங்கத்திற்கு நாளொன்றிற்கு கிடைக்கின்ற சுமார் 04 பில்லியன் ரூபா வருமானம் 02 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.