நான் அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இருப்பேன்-மு‌ஷரப்

320 0

201610021039106605_democracy-has-not-been-tailored-to-pakistan-pervez-musharraf_secvpfநான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என முன்னாள் அதிபர் மு‌ஷரப் ஆதங்கப்பட்டார்.

உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. 55 தீவிரவாதிகளை கொன்று அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இது பாகிஸ்தானுக்கு அச்சத்தை விளைவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது மிகவும் முக்கியமான வி‌ஷயமாகும். போர் நடத்த வேண்டும் என்ற கட்டுக்கடங்காத எரிச்சல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால் இந்த மனோபாவம் பாகிஸ்தானிடம் இல்லை.

இந்த நோக்கம் எப்போதும் அவர்களிடம் (இந்தியாவிடம்) தான் உள்ளது. இது தற்போது மட்டுமல்ல. எப்போதுமே இந்த எண்ணம் அவர்களுக்கு உண்டு.

சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பாகிஸ்தான் ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்தின் பங்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. ஏனெனில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சரியான முறையில் வழி நடத்தப்படாததே காரணமாகும். பொதுவாக பாகிஸ்தான் ஜனநாயக அமைப்பில் ஒழுங்கான நடைமுறைகள் மற்றும் அதிகார மைய அமைப்புகள் இல்லை. அதுவே தடை மற்றும் நடுநிலைப்படுத்துதல் உள்ளிட்ட தன்மைகள் ஏற்பட வழி இல்லாமல் போய்விட்டது. அரசியல் அமைப்பு சட்டத்திலும் அதற்கான வழி முறைகள் இல்லை.

எனவே அமெரிக்கா பாகிஸ்தானை தனது வசதிக்கு பயன்படுத்தி கொண்டது. அதன் மேலான கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் நான் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்.’’இவ்வாறு அவர் கூறினார்.