402 கிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 14 கையடக்கத் தொலைபேசிகளுடன் 06 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ராஜகிரிய, மினுவங்கொட, வவுனியா, புளியங்குளம் மற்றும் வெயாங்கொட் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28,32,46,26,35 வயதடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவால் மீரிகம மற்றும் வெயாங்கொட பிரதேசங்களில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 01ம் திகதி கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி மற்றும் அதற்கான 18 தோட்டாக்கள் மற்றும் 03 கைக்குண்டுகளுடன் இந்த 05 பேரும் புளியங்களும் பொலிஸ் அதிகாரிகளால் ஏ9 வீதி, புதுர் கோவிலுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.