ஐ.தே.கவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது – துமிந்த

277 0

பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்துள்ள கட்சியொன்று தேவையேற்படின் அரசியலமைப்பிற்கேற்ப அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். 

அந்த வகையில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியால் அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளதாக கூறப்படும் பிரேணையொன்றை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் பிரியெல்ல பாராளுமன்ற பொதுச் செயளாலரிடம் கைளித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment