ஞானசாரரை எதிர்க்கும் இந்துக்கள் இந்த நாட்டில் சாதிக்கப்போவதுதான் என்ன?

280 0

நாட்டின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் இலங்கையின் இருபெரும் தேசிய இனங்களான சிங்களவர்களும் தமிழர்களும் இரு துருவங்களாக வேறுபட்டு பரஸ்பரம் துவேஷ உணர்வுடன் பார்க்கும் நிலையே தொடர்கின்றது. 

ஞானசாரதேரர் போன்ற பிரபலமான ஒரு பௌத்த செயற்பாட்டாளர் சிக்கலில் உள்ள போது இந்துக்கள் குரல்கொடுக்கின்றார்கள் என்றால் இது சிங்கள மக்கள் மத்தியில்  எந்தளவு உயரிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் என சிந்திக்க வேண்டும். 

ஞானசாரரை எதிர்க்கும் இந்துக்கள் இந்த நாட்டில் சாதிக்கப்போவதுதான் என்ன? எம்மைப்பொறுத்தவரை இந்த நாட்டில் எமது அடுத்த சந்ததியினர் சிங்களவர்களுடன் அமைதியான முறையில் வாழவேண்டும் .அதற்கான பலமான அடித்தளத்தையே நாங்கள் அமைக்கின்றோம் என இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் டி.அருண்காந்த் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கோட்டை ரயில்நிலைய முன்றலில் இலங்கை இந்து சம்மேளனத்தின் சார்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


Leave a comment