குழந்தைகள் ஆபாச வீடியோ வைத்திருந்த இந்தியர் ஆஸ்திரேலியாவில் கைது

329 0

குழந்தைகள் ஆபாச வீடியோ வைத்திருந்த இந்தியர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 26 ம் தேதி குழந்தைகள் பாலியல் வீடியோ  மற்றும் மிக மோசமான ஆபாச  வீடியோக்களை வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய  விமான நிலையத்தில் வைத்து மன்ரிபீத் சிங்  (வயது 32)  என்ற இந்தியர் ஒருவர்  கைது செய்யப்பட்டார். 

கோலாலம்பூரிலிருந்து இருந்து பெர்த்  சென்ற மன்ரிபீத் சிங்  கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு ஏழு மாத சிறை தண்டனையும், அபராதமும்  விதிக்கப்பட்டு உள்ளது.
கைது செய்யபட்ட பின் போலீஸ் அதிகாரிகள் மன்ரிபீத் சிங்கிடம் இருந்து மொபைல் போனை கைப்பற்றினர். அவரது சுற்றுலா விசா ரத்து செய்யப்பட்டது. அவர் சிறைவாசத்தை முடித்தபின் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என கூறப்படுகிறது.
விமான நிலையத்தில்  பாதுகாப்பு சோதனையின்  போது, மன்ரிபீத் சிங் இரண்டு மொபைல் போன்களில் ஒன்பது ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவர் வைத்திருந்த வீடியோ ஆபாச காட்சிகள்  கடுமையான தண்டனைக்குரியதாக கருதப்படுகிறது. 

Leave a comment