தனியார் கல்வி நிலையத்திற்குத் தீ வைப்பு

1402 18

மன்னார் பெற்றா பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் இன்று காலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தைத் திறந்த போது தீப்பற்றி எரிவதைக் கண்ட நிலையில், உடனடியாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் பாரிய சேதங்கள் ஏவையும் ஏற்படவில்லை.இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த கல்வி நிலைய பகுதிக்கு சென்றுள்ள இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்துக் குறித்த கல்வி நிலையத்தின் வகுப்பறை கூடம் மீது வீசியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இதன்போது தீ ஏற்பட்டுக் குறித்த வகுப்பறையின் உள்ளக பகுதிகளில்  மரத்தினாலான பகுதிகள் எறிந்துள்ளது.

 உருகிய நிலையில் இரண்டு பிளாஸ்ரிக் போத்தல்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தீயைக் கட்டுப்படுத்திய நிலையில் அவசர பொலிஸ் சேவைஅழைப்பை ஏற்படுத்திய போதும் அவர்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளைக் கிராம அலுவலகர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை அவதானித்தனர்.

அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு இடையில் தொடர் போட்டி நிலவுவதாகவும் தெரிய வருகின்றது.

Leave a comment