நாட்டின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு விவசாய பெருமக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக் கூடிய முறையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவற்றை செயன்முறை படுத்தும் வகையில், உருளைக்கிழங்கு செய்கையாளர்களை ஊக்குவிப்பதற்கும், அறுவடையின் பயன்களை எமது நாட்டு விவசாய உற்பத்தியாளர்களும், நுகர்வோரும் பாதிப்படையாத வகையில் பெற்றுக்கொள்ளும் முகமாக இறக்குமதி வரி 50 ரூபாவாக பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கிராம சக்தி செயற்திட்டத்தின், முன்னிலைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது விவசாய அமைப்புக்கள், உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கும் அங்கஜன் இராமநாதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.