இருவேறு வாகன விபத்தில் இருவர் பலி

21701 259

நாட்டின் இருவேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து சம்பவங்கள்  நேற்று   இடம்பெற்றுள்ளதுடன், பியகமை மற்றும் போல்பிதிகம ஆகிய பகுதிகளிலேயே  பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது  .

அதற்கமைய   பியகமை – உலஹடிவெல பகுதியில்   கறுவுகஸ் சந்தி பகுதியிலிருந்து   முக்கல்லான பகுதியை நோக்கி பயணித்த  வான்   கட்டுப்பாட்டை  இழந்து  பாதையில் பயணித்த பாதசாரிகள் இருவர்  மீது மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது . 

இதன் போது  படுகாயமடைந்த பாதசாரிகள்  இருவரும் கம்பஹா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  இவர்களில்  36 வயதுடைய மல்வானை பகுதியை சேர்ந்தவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர்  தொடர்ந்தும்  சிகிச்சை  பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, சம்பவத்துடன், தொடர்புடைய வேன் சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

மேலும், மஹர  – சியம்பலன்கமுவ  வீதியின்  போல்பிதிகமை  பகுதியில்  இடம் பெற்ற விபத்தில் 64 வயதடைய மொரகொல்லாகம பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

மட்டகல்ல பகுதியிலிருந்து சியம்பலன்கமுவ பகுதியை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த  சைக்கிளொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானமையினாலேயே மேற்படி உயிரிழப்பு சம்பவித்துள்ளது.  

விபத்தில்  படுகாயமடைந்த  மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஓட்டுனர்கள் இருவரும் பொல்பிதிகம வைத்திய சாலையில்  அனுமதிக்க்பட்டுள்ள நிலையில்  சைக்கிள் ஒட்டுனரெ இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பொல்பிதிகமை வைத்திய சாலையின் பிதே அறையில் வைக்க்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தொடர்ந்துதும் வைத்திய சாலையில்  சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். 

விபத்து சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதிகளுக்கு பொறுப்பான பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a comment