ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.
எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் இவர்களது விஜயம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் இந்தியாவின் விருந்தினர்களாக செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே சமயத்தில் அண்டை நாடான இந்தியாவுக்கு செல்வது மிகவும் அரிதான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களான ராஜ்நாத்சிங், சுஸ்மா சுவ்ராஜ், நிடிஸ் கட்காரி உட்பட பல உயர்மட்ட தரப்பினர்களை சந்திக்க உள்ளனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மூன்று முறை இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அதேவேளை, பிரதமர் இரண்டு முறை விஜயம் செய்துள்ளார்.
நாளை மறுதினம் நியூசிலாந்திலிருந்து சிங்கபூர் ஊடாக பிரதமரும், அவரது பாரியாரும் இந்திய தலைநகர் செல்கின்றனர்.
அதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதியும் அவரது பாரியாரும் புதுடெல்கி செல்கின்றனர்.