ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம் – டி.வி.சானக

323 0

ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது பயனற்ற விடயமாகும். வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து மீண்டும் ஆட்சியினை கைப்பற்றுவோம். அமைச்சு பதவிகளுக்காக வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஆளும் தரப்பில் ஒரு சிலர் குறிப்பிடுவது அவர்களது கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment