2018 ஆம் ஆண்டு மொத்த வரவு-செலவில் 25 வீதம் அரசாங்கத்தினால் கல்வி மற்றும் சுகாதார துறைகளின் அபிவிருத்தியின் பொருட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
பெரலபனாதர வித்தியாலயத்தில் நடைப்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
சுகாதார துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், மாகாண மற்றும் தேசிய மட்டத்திலான சுகாதார சேவையின் பொருட்டு ரூபாய் 244 பில்லியன்கள் செலவிடப்பட்டுள்ளது. அது மொத்த வரவு-செலவில் நூற்றிற்கு 11.26 வீதமாகும். கல்விக்காக 14 வீதமும், சுகாதாரத்திற்காக 11 வீதமும் மொத்தமாக 25 வீதம் இந்த துறைகளுக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.